நெல்லை, தூத்துக்குடியில் மீட்புப் பணிகளில் 6 ஹெலிகாப்டர்கள்…

by Lifestyle Editor

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 6 ஹெலிகாப்டர்களும், 625 பேரிடர் மீட்பு படையினரும், 220 பயிற்சி பெற்ற காவலர்களும், 168 பேர் முப்படை வீரர்களும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வருவாய் மற்றும் பேரிடர் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “ 2 தினங்களில் பெய்த மழை காரணமாக 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லையும், தூத்துக்குடியும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் தீவிர மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டத்தை பொருத்தமட்டில் உயிர் சேதம் இல்லை. 83 வீடுகள் சேதமடைந்துள்ளது. 2 கால்நடைகள் மட்டுமே உயிரிழந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 3,009 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள நெல் 18,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர் வகைகளும் சேதமடைந்துள்ளது. சேத மதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு வரும் போது பாதிப்புகள் குறித்து முறையிட்டு மத்திய அரசிடம் தேவையான நிதி பெற நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ரயிலில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 625 பேரிடர் மீட்பு படையினரும், 220 பயிற்சி பெற்ற காவலர்களும், 168 பேர் முப்படை வீரர்களும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 6 ஹெலிகாப்டர்கள் இந்த மீட்பு பணியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மீட்பு பணிகள் 4 மாவட்டங்களில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சேதம் குறித்தும் முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, இறுதி சேத மதிப்பு முறையாக மத்திய குழுவிடம் தாக்கல் செய்து தேவையான நிதி பெற்று மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு சென்னை போல் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதல்வர் முடிவெடுப்பார்” என்றார்.

Related Posts

Leave a Comment