வீட்டில் பணம் அதிகம் சேர வேண்டுமா? அப்ப இந்த செடிகளை வீட்டுல வையுங்க…

by Column Editor

நாம் அனைவருமே குடியிருக்கும் வீடு அழகாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். வீட்டை அழகாக வைத்துக் கொள்ள நாம் வீட்டில் ஒருசில பொருட்களை வாங்கி வைத்து அழகுப்படுத்துவோம். அதில் சிலர் செடிகளால் வீட்டை அலங்கரிக்க விரும்புவார்கள். பசுமையான செடிகளால் வீட்டை அலங்கரிக்கும் போது, அது ஒரு நல்ல புத்துணர்ச்சியான உணர்வைத் தரும். மேலும் வாஸ்துப்படி, செடிகள் காற்றை சுத்திகரிப்பதை விட பல நன்மைகளை வழங்குகின்றன.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் ஒருசில செடிகளை வைத்து வளர்ப்பதால், அது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்ற உதவி புரிவதோடு, வீட்டினுள் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கும். இது தவிர, வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவி புரியும்.

நீங்கள் உங்கள் வீட்டில் நிறைய பணப் பிரச்சனைகளை சந்தித்தாலோ அல்லது வீடு செல்வ செழிப்போடு இருக்க விரும்பினாலோ, வாஸ்துப்படி ஒருசில செடிகளை வீட்டில் வைத்து வளர்த்து வாருங்கள். இப்போது அந்த செடிகள் எவையென்பதைக் காண்போம்.

துளசி (Tulsi Plant)

துளசி செடி லட்சுமி தேவியின் அம்சமாக கருதப்படுகிறது. இந்த செடியில் லட்சுமி தேவி குடியிருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. நீங்கள் உங்கள் வீடு செல்வ செழிப்போடு இருக்க விரும்பினால், துளசி செடியை வீட்டில் வைத்து வளர்த்து வாருங்கள். இதனால் வீடு செல்வ செழிப்போடு இருக்கும்.

மூங்கில் (Bamboo Plant)

அதிர்ஷ்டத்திற்காக பலரது வீடு மற்றும் அலுவலகங்களில் மூங்கில் செடி இருப்பதைப் பார்த்திருக்கலாம். வாஸ்துப்படி, இந்த மூங்கில் செடியை வீட்டின் ஹாலில் வைத்திருந்தால், அது வீட்டில் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், புகழ், அமைதி மற்றும் பணம் ஆகியவற்றைக் கொண்டு வரும். எனவே உங்கள் வீட்டில் செல்வம் பெருக விரும்பினால், மூங்கில் செடியை வீட்டில் வாங்கி வையுங்கள்.

பாம்பு செடி (Snake Plant)

பாம்பு செடி ஆற்றலைப் புதுப்பிக்கும் சக்தி வாய்ந்த செடியாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வீட்டினுள் செடியை வளர்க்க விரும்புபவர்கள், பாம்பு செடியை வாங்கி வைத்தால், அது வீட்டில் அமைதியை அதிகரிப்பதோடு, வீட்டினுள் ஆக்ஸிஜன் நிறைந்த காற்றினை அதிகரிக்கும். இது தவிர பாம்பு செடி வீட்டில் செல்வத்தை அதிகரிக்க உதவும்.

மல்லிகை செடி (Jasmine Plant)

மல்லிகை நல்ல மணத்தைக் கொண்ட செடி. வாஸ்துப்படி, மல்லிகை அதன் நறுமணத்தால் மனநிலையை ரிலாக்ஸ் அடையச் செய்வதோடு, வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது. நல்ல மணம் உள்ள செடியில் லட்சுமி தேவி குடியிருப்பாள் என்பது நம்பிக்கை. எனவே மல்லிகை செடியை வீட்டில் வைத்து வளர்க்கும் போது, லட்சுமி தேவியின் அருளால் வீட்டின் செல்வ நிலை அதிகரிக்கும். மல்லிகை செடியை வீட்டின் வெளியே வைப்பவர்கள், செடியானது கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு நோக்கி இருக்க வேண்டும்.

லில்லி (Lilly Plant)

லில்லி செடி அன்பு மற்றும் நல்லிணக்கத்தைக் குறிக்கிறது. லில்லி செடியை வீட்டில் வைத்து வளர்த்து வந்தால், அது இரவு நல்ல தூக்கத்தைப் பெற உதவுவதோடு, கெட்ட கனவுகளைத் தடுக்கும். அதற்கு இந்த லில்லி செடியை வீட்டின் படுக்கை அறையில் வைத்து வளர்க்க வேண்டும்.

வாழை செடி (Banana Plant)

வாழைப்பழம் வீட்டின் கொள்ளைப்புறங்களில் வைத்து வளர்க்க ஏற்ற ஒரு அற்புதமான செடியாகும். வாஸ்துப்படி, வாழைச்செடியை வீட்டில் வைத்து வளர்த்தால், வாழை வளர்வது போன்று வீட்டின் செல்வ நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும். அதுவும் இந்த செடியை வீட்டின் வடழிக்கு மூலையில் வைத்து வளர்ப்பது நல்ல பலனைத் தரும்.

Related Posts

Leave a Comment