வெயில் காலத்தில் ரோஜா செடிகள் வாடாமல் இருக்க சில ஆலோசனைகள்…

by Editor News

அனைவரின் வீட்டிலும் கண்டிப்பாக ரோஜா செடிகள் இருக்கும். இந்த ரோஜா செடிகள் அதிக நேரம் சூரிய ஒளியில் இருந்தால் வாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதுவும் இந்த வருடத்தில் அதிக வெயில் இருப்பதால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். செடிகள் வாடாமல் இருக்க கடைபிடிக்க வேண்டியவற்றை பார்க்கலாம் வாங்க…

முதலில் உங்கள் ரோஜா செடிகளை அரை நிழல் பகுதியில் வைக்கவும். அரை நிழல் பகுதியில் இருப்பதால் செடிகள் வாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.

அதுபோன்ற இடம் இல்லையென்றால், பச்சை நிற நிழல் வலையை பயன்படுத்தி இந்த செடிகளை பொருத்தமான இடத்தில் வளர்க்கலாம். அது மட்டும் இல்லாமல் உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் நிழலான பகுதிகளிலும் வளர்க்கலாம்.

அடுத்ததாக, இந்த கோடைக்காலத்தில் ரோஜா செடிகளுக்கு சீரான இடைவெளியில் தண்ணீர் பாய்ச்சுவது மிகவும் அவசியம். சரியான நீர் வழங்கல் இல்லாவிட்டாலோ, அதிக வெயில் படும்படி இருந்தாலோ, ரோஜா செடிகளின் இலைகள் விரைவில் காய்ந்துவிடும்.

காலை ஏழு மணிக்கு முன்பே ரோஜா செடிகளுக்கு தண்ணீர் விட வேண்டும். இல்லையென்றால் மாலை 5 மணிக்கு தண்ணீர் விடுவது நல்லது.

இந்த நேரங்களில் மட்டும் தண்ணீர் விட்டால் அடுத்த நாளில் செடிகள் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கக்கூடும். இந்த நடைமுறைகளை இந்த ஒரு மாதத்திற்கு பின்பற்றினால் செடிகள் நன்றாக இருக்கும் , பிறகு மழைக்காலங்களில் எந்தவித பிரச்னைகளும் வராமல் தவிர்க்கலாம்.

Related Posts

Leave a Comment