ரோஜா செடியில் அதிக பூக்களை கொண்டு வருவதற்கான புதிய வழிமுறைகள்…

by Editor News

ரோஜா பூக்கள் கிட்டதட்ட 700 வகைகளுக்கும் மேல், பல நூறு அழகிய வண்ணங்களில் காணப்படுகிறது. இந்த பூக்கள் பொதுவாக எல்லோரது வீட்டிலும் காணப்படும். ஆனால் ஒரு சில தாவரங்களில் இந்த பூக்கள் குறைவாகவே வரும்.

இப்படி வராமல் நிறைய பூக்கள் பூப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன. ரோஜா செடியை தேர்ந்தெடுக்கும் போது அதிக கிளைகள், தண்டுகள், பெரிய தொட்டியில் இருக்கும் ரோஜா செடிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த செடியை வளர்க்கும் மண் எப்போதும் ஒரு செம்மண்ணாக இருக்க வேண்டும். செடிகளுக்கு தேவையான பலவிதமான நுண்ணூட்டச் சத்துக்களும் செம்மண்ணில் இருக்கின்றது.

இந்த செடியை நடும் போது முடிந்தவரை மண் தொட்டியில் செடிகளை வைத்தால் இன்னும் அதிக பூக்களை பெற முடியும். இந்த செடிகளில் பூக்கள் வந்தவுடன் அதன் தளிரில் பூவை பறிக்க கூடாது.

அதிக வெயில் படும்படியான இடத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும். ரோஜா செடி காலைவெயிலும் மாலைவெயிலும் இருந்தாலே போதுமானது.

குறைந்த பட்சம் ஆறு மணி நேரமாவது இந்த செடியை சூரிய வெளிச்சத்தில் வைக்க வேண்டும். கூடிய வெயிலில் இருக்காமல் குறைந்த வெயில் இருக்கும்படியான இடத்தை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

Related Posts

Leave a Comment