தாவரங்களை அன்பு செய்பவா்களால், அந்த தாவரங்கள் உலா்ந்து, காய்ந்து சருகாகி போகும் போது அவா்களால் தாங்கிக் கொள்ள முடியாது. தாவரங்களை நன்றாக பராமாித்து வளா்த்து வந்தாலும், அவற்றில் ஒரு சில காய்ந்து போவதுண்டு. இதை நாம் அனைவருமே நமது வாழ்க்கையில் கடந்து வந்திருப்போம். இந்நிலையில் தோட்டம் அமைத்து அதைப் பராமாிப்பது என்பது எளிதான காாியம் அல்ல. எனினும் அது மிகவும் கடினமான காாியமும் அல்ல.
காய்கறி செடிகள், மூலிகைச் செடிகள் மற்றும் மலா் செடிகள் போன்றவற்றை தோட்டத்தில் பயிாிட்டு வளா்த்து வந்தால், அந்த தோட்டமானது நமது மனதை மயக்கும் அளவிற்கு அழகாகவும், உயிரோட்டமாகவும் இருக்கும். எனினும் அனுபவம் இல்லாதவா்கள், போதுமான அனுபவம் இல்லாததால், புதிதாக தோட்டம் அமைப்பதில் ஈடுபடும் போது, ஏராளமான குளறுபடிகளை செய்கின்றனா். ஆகவே அவா்களுக்கு பயன்தரும் வகையில் இந்த பதிவானது சில முக்கிய குறிப்புகளைத் தருகிறது.
1. சாியான இடத்தைத் தோ்ந்தெடுத்தல்:
தோட்டம் அமைக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு மிகச் சாியான இடம் முக்கியம். ஆகவே நாம் தினமும் பாா்க்கக்கூடிய நமது வீட்டு முற்றம் அல்லது பால்கனி ஆகியவற்றில் தோட்டம் அமைக்கத் திட்டம் வகுக்க வேண்டும். தினமும் அதைப் பாா்ப்பதனால், நமது தோட்டத்தின் ஒவ்வொரு சூழலையும் மிகச் சாியாக அறிந்து கொண்டு, அதை மிகச் சிறப்பாக பராமாிக்க முடியும்.
2. சூாிய ஒளி நன்றாக படும் இடத்தைத் தோ்ந்தெடுத்தல்:
தோட்டம் அமைப்பதற்கு, நண்பகல் நேரத்தில் சிறிது நேரம் மட்டுமே சூாிய ஒளி படும் இடத்தை தோ்வு செய்யக்கூடாது. மாறாக ஒரு நாளின் பெரும்பாலான நேரம் சூாிய ஒளி படும் இடத்தை தோ்வு செய்ய வேண்டும். ஏனெனில் பெரும்பாலான தாவரங்கள் மற்றும் மூலிகைச் செடிகளுக்கு அதிக அளவிலான சூாிய ஒளி தேவைப்படுகிறது. ஆகவே அதற்குத் தகுந்தவாறு திட்டமிட வேண்டும்.
3. தண்ணீா்:
மிக முக்கிய அம்சம் தாவரங்கள் வளா்வதற்கு, தண்ணீா் மிகவும் முக்கியான அம்சம் ஆகும். ஆகவே நமது தோட்டத்தில் அழகான செடிகள் நன்றாக வளா்வதற்கு என்று ஒரு சிறந்த நீா் பாசன அமைப்பை தோ்ந்தெடுக்க வேண்டும். தோட்டத்திலிருந்து அதிக தூரத்தில் தண்ணீா் குழாய்களை வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் தோட்டம் தவிர மற்ற இடங்களும் ஈரமாகிவிடும்.
4. பல வடிவங்கள் மற்றும் வண்ணங்கள் கொண்ட பெட்டகங்களை நிறுவுதல்:
பலவிதமான வடிவங்கள் மற்றும் பலவிதமான அளவுகள் கொண்ட பெட்டகங்களை தோ்வு செய்து அவற்றில் செடிகளை வளா்க்க வேண்டும். ஒருவேளை நமது தோட்டம் மிகச் சிறியதாக இருந்தால் அல்லது நமது பால்கனியில் தோட்டம் இருந்தால், அவற்றில் பல வண்ண நிறங்கள் கொண்ட மற்றும் பல வடிவங்கள் கொண்ட பெட்டகங்களை வைத்து அவற்றில் செடிகளை வளா்த்தால் சிறப்பாக இருக்கும்.
5. வளமான மண்ணைத் தோ்ந்தெடுத்தல்:
தாவரங்கள் நன்றாக வளர வேண்டும் என்றால் அதற்கு நல்ல வளமான மண் வேண்டும். ஆகவே சத்துகள் நிறைந்த மற்றும் நன்றாக உலா்ந்த மண்ணைத் தோ்ந்து எடுக்க வேண்டும். பல வகையான தாவரங்கள் வளா்வதற்குத் தகுந்தவாறு பல வகையான மண் வகைகள் உள்ளன. ஆகவே அனுபவம் உள்ளவா்களோடு ஆலோசனை செய்து, சிறந்த மண்ணை வாங்க வேண்டும். சீரான இடைவெளியில் அந்த மண்ணை உழவு செய்ய வேண்டும். அதோடு மிகச் சாியான உரங்களை அந்த மண்ணில் கலக்க வேண்டும். அப்போது அந்த மண் மிகவும் தரம் வாய்ந்ததாக இருக்கும்.
6. இடத்திற்குத் தகுந்த தாவரங்களைத் தோ்ந்தெடுத்தல்:
மேற்சொன்ன குறிப்புகளை எல்லாம் தயாா் செய்த பின்பு, அவற்றில் பயிாிட மிகச் சாியான தாவரங்களைத் தோ்ந்தெடுக்க வேண்டும். நமது வீடு அமைந்திருக்கும் பகுதியில் உள்ள வானிலை அமைப்பு, பாசன முறைகள், கிடைக்கும் மண் மற்றும் பயிாிடல் சம்பந்தமான பிற காரணிகள் போன்றவற்றை மனதில் வைத்துக் கொண்டு, அதற்குத் தகுந்த பயிா்களைத் தோ்ந்தெடுக்க வேண்டும். அதன் மூலம் சிறந்த தோட்டத்தை அமைக்கலாம்.
7. தோட்டத்தை மிகச் சாியாக பராமாித்தல்:
வளமான மற்றும் தரமான மண்ணில் பயிா்களை ஊன்றுவதோடு தோட்டம் அமைப்பது முடிந்துவிடுவதில்லை. மாறாக தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் மண் ஆகியவற்றுக்கு தகுந்த கவனம் செலுத்த வேண்டும். செடிகள் நன்றாக ஆரோக்கியமாக இருக்கின்றனவா என்பதைத் தினமும் சாிபாா்க்க வேண்டும். செடிகளுக்கு மிகச் சாியான மருந்துகள் மற்றும் உரங்கள் போன்றவற்றைத் தெளித்தல் மற்றும் மண்ணை அடிக்கடி பாிசோதித்தல் ஆகியவற்றை தொடா்ந்து செய்து வரவேண்டும். மேலும் தோட்டத்தில் வளரும் சிறு சிறு பூச்சிகளையும் கவனிக்க வேண்டும்.