204
ஓமிக்ரோன் கொவிட் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த, எதிர்வரும் டிசம்பர் 26ஆம் திகதி முதல் வேல்ஸில் உள்ள அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலும் பார்வையாளர்கள் தடை செய்யப்படுவார்கள் என வேல்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அனைத்து உட்புற, வெளிப்புற, தொழில்முறை மற்றும் சமூக விளையாட்டு நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும்.
விளையாட்டு கழகங்கள் மற்றும் அரங்குகளை ஆதரிக்க மூன்று மில்லியன் பவுண்டுகள் பார்வையாளர் விளையாட்டு நிதி கிடைக்கும் என பொருளாதார அமைச்சர் வாகன் கெதிங் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸுக்குப் பிந்தைய விருந்தோம்பல் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்க அமைச்சர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பின்னர் கூடுவார்கள்.