ரிஷி சுனக்கின் பேச்சுக்கள் நம்பிக்கையின் அறிகுறி: செவிலியர்களின் ஊதியம் தொடர்பில் பாட் கல்லன் கருத்து ..

by Lifestyle Editor

செவிலியர்களின் ஊதியம் தொடர்பாக பிரிதமர் ரிஷி சுனக் கூறியுள்ள கருத்துக்கள், நம்பிக்கையின் அறிகுறியாக இருப்பதாக செவிலியர் சங்கத்தின் தலைவர் பாட் கல்லன் கூறியுள்ளார்.

பிபிசி ஊடகத்துக்கு பிரிதமர் ரிஷி சுனக் அளித்த செவ்வியில், பொறுப்பு மற்றும் மலிவான ஊதிய ஒப்பந்தத்திற்குத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

இந்தநிலையில், பிரதமர் பேச்சுவார்த்தைக்கு வருவது குறித்து கூறியிருந்தாலும், ஆனால் இந்த ஆண்டு ஊதியம் இன்னும் சர்ச்சையில் இருப்பதால் வேலைநிறுத்தங்கள் தொடரும் என றோயல் செவிலியர் கல்லூரியின் பொதுச் செயலாளர் பாட் கல்லன் கூறினார்.

சுகாதார செயலாளர் இன்று (திங்கட்கிழi) தொழிற்சங்கங்களுடன் ஒரு கூட்டத்தை நடத்த உள்ளார், ஆனால் அரசாங்கம் இதுவரை அடுத்த நிதியாண்டிற்கான தீர்வு பற்றி விவாதிக்க மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளது.

நடப்பு ஆண்டான 2022-23ஆம் ஆண்டில் சராசரியாக 4.75 சதவீத உயர்வைப் பெற செவிலியர்கள் ஏற்கனவே தயாராக உள்ளனர். இது ஜூலை மாதம் சுதந்திரமான தேசிய சுகாதார சேவை ஊதிய மறுஆய்வு அமைப்பின் பரிந்துரையின்படி உள்ளது. ஆனால் உயரும் வாழ்க்கைச் செலவைக் குறைக்க இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று தேசிய சுகாதார சேவை கூறுகிறது.

Related Posts

Leave a Comment