பிரேசில் வன்முறை – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் ..

by Lifestyle Editor

பிரேசில் நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட அடுத்து, அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்குதல் நடத்திய நிலையில், இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரேசில் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கிடையே, வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பிரேசில் நாடாளுமன்றத்திற்குள் போல்சனேரோவின் ஆதரவாளர்கள் இன்று நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மாளிகை, அந்நாட்டின் உச்சநீதிமன்ற வளாகம் முன் திரண்ட போல்சனேரோ ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் லூயிசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தால் பிரேசிலில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வன்முறை சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வாருகின்றனர். இந்நிலையில், பிரேசில் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய சம்ப்வத்துக்கு அமெரிக்கா கன்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், பிரேசிலில் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலையும், அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றுவதையும் நான் கண்டிக்கிறேன். பிரேசிலின் ஜனநாயக நிறுவனங்களுக்கு எங்கள் முழு ஆதரவு உள்ளது. அவர்களின் விருப்பத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுடன் தொடர்ந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன். இவ்வாறு பதிவிட்டுளார்.

Related Posts

Leave a Comment