தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

by Column Editor

சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரணுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.

தீபாவளிக்குப் பிறகு தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை, இந்த மாதம் (டிசம்பர் ) தொடங்கியதிலிருந்தே ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. இந்த 20 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய்க்கும் மேல் உயர்ந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இறக்கம் கண்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 36,728க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து 4,554 ரூபாய்க்கும் சவரனுக்கு 160 ரூபாய் சரிந்து 36,432 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் ஒரு சவரன் 39,360 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் நேற்று மாலை நிலவரப்படி ரூ.65.96 விற்பனை ஆன வெள்ளி, இன்று கிராமிற்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் 65.20 காசுகளுக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ 65,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை காலம் நெருங்கும் இந்தக் காலக்கட்டத்தில் தங்கம் விலை குறைந்திருப்பதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Posts

Leave a Comment