ஜிமெயில் உள்பட கூகுள் கணக்குகளை இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தாமல் இருந்தால் அந்த கணக்குகள் நீக்கப்படும் ..

by Editor News

கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில், டாகுமெண்ட், டிரைவ், காலண்டர், யூடியூப், கூகுள் போட்டோ ஆகியவைகளில் கணக்கு வைத்திருக்கும் பயனாளர்கள் இரண்டு ஆண்டுக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால் அந்த கணக்குகள் நீக்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு முறையாவது பயனார்கள் தங்கள் கணக்குகளில் லாகின் செய்து இருக்க வேண்டும் என்றும் அதை செய்யாத பயனாளர்களின் கணக்குகள் நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இன்-ஆக்டிவ் அக்கவுண்ட்ஸ்’ என்ற கொள்கை சார்ந்த முடிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment