சீதாவால் மகாவுக்கு வந்த சிக்கல் … சீதாராமன் சீரியல் …

by Lifestyle Editor
0 comment

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அர்ச்சனா மற்றும் மகாலட்சுமி என இருவரும் சீதாவை நிறைய வேலை வாங்க அப்போது சீதா வெளியே குப்பை கொட்ட போன போது அக்கம் பக்கத்தை சேர்ந்த இரண்டு பேர் சீதாவை பார்த்து சிரித்து கொண்டே இருக்க சீதா எதுக்கு சிரிக்கறீங்க என கேட்கிறாள்.

அதற்கு அந்த இரண்டு பேரும் நீ பைத்தியம் அதனால் தான் சிரிக்கிறோம் என சொல்ல சீதா நான் பைத்தியம் இல்லை என சொல்ல மகா தான் நீ பைத்தியம்னு சொன்னாங்களே என விடாமல் அவளை பைத்தியம் பைத்தியம் என சொல்லி சிரிக்க சீதா கோபமாகி அவர்களது கார் கண்ணாடியை கல் எடுத்த அடித்து உடைக்கிறாள்.

இதனால் இருவரும் கோபப்பட சீதா நீங்க தைரியமான ஆம்பளையா இருந்தா என் சின்ன மாமியார், மாமனார் மேல் கை வையுங்க என சொல்லி உள்ளே செல்ல இவர்களும் சீதாவை பின்தொடர அர்ச்சனா வெளியே என்னடி சத்தம் என கேட்க யாரோ இரண்டு பேர் உங்களை பார்க்க வந்திருக்காங்க, செக்யூரிட்டி உள்ளே விடல என சொல்கிறாள்.

பிறகு அர்ச்சனா அவங்க ரெண்டு பேரையும் உள்ளே கூப்பிட அவர்கள் நடந்த விஷயங்களை சொல்லி நீங்க தானே சொன்னீங்க அந்த பொண்ணு பைத்தியம் என்று என உண்மையை உடைக்க அர்ச்சனா எதுவும் பேச முடியாமல் நிற்கிறாள்.

அடுத்து சுபாஷ் வர சீதா இந்த நபர்களை ஏத்தி விட அவர்கள் சுபாஷை அடி வெளுக்கிறார்கள். பிறகு மகாவிடம் இந்த பஞ்சாயத்து செல்கின்றது. மகா சீதா மீது போலீஸில் கம்ப்ளைன்ட் கொடுக்க முடிவு செய்ய அங்கு வரும் சீதா முதலில் கெஞ்சுவது போல நடித்து பிறகு இங்க போலீஸ் வந்து நீங்க ரிஷப்ஷனில் செய்த வேலைகள் அனைத்தும் சொல்லி விடுவேன் என மிரட்டுகிறாள்.

Related Posts

Leave a Comment