கனடாவில் வீடு கொள்வனவு செய்ய கட்டாயம் இருக்க வேண்டியவை …

by Lifestyle Editor

கனடாவில் நீங்கள் வீடு ஒன்றை கொள்ளளவு செய்ய உத்தேசித்துள்ளீர்களா அவ்வாறானால் உங்களுக்கு இந்த அளவு வருமானம் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

ஆண்டுதோறும் கனடாவில் வீட்டு விலை தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் நிலையில் அண்மை காலமாக வீட்டு விலைகள் குறைவடைந்து செல்லும் போக்கினை அவதானிக்க முடிகிறது.

எனினும் கடந்த ஆண்டில் ஒருவர் ஈட்டிய வருமானத்தை விடவும் கூடுதல் வருமானத்தை ஈட்டினாலே வீடு ஒன்றை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

சராசரியான வீட்டின் விலை

சுமார் ஒரு மில்லியன் சுமார் ஒன்று தசம் ஒரு மில்லியன் டொலர் பெருமதியான வீடு ஒன்றை மார்ச் மாதம் கொள்வனவு செய்ய வேண்டுமாக இருந்தால் அவருடைய வருடாந்த வருமானம் 217,000 டொலர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

இது ஒப்பீட்டளவில் 2022 ஆம் ஆண்டை விடவும் 6250 டொலர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் சராசரியான வீட்டின் விலை 2 லட்சம் டொலர்களினால் வீழ்ச்சி அடைந்துள்ளது.

வான்கூவாரில் வீடு ஒன்றை கொள்வனவு செய்ய வேண்டுமானால் வருட வருமானம் 2 லட்சம் டொலர்களாக இருக்க வேண்டும் எனவும் ஏனைய பகுதிகளில் 75 ஆயிரம் முதல் 170 ஆயிரம் டொலர்கள் வரையில் வருமானம் ஈட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

வீடுகளின் விலைகள் ஒருபுறம் குறைந்து சென்றாலும் வீடு ஒன்றை வாங்குவதற்கு வருட வருமானம் அதிக அளவில் தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment