தொழிலாளர்களின் அதிகபட்ச வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவதற்கான சட்ட மசோதா – தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை …

by Lifestyle Editor

சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதாவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் அதிகபட்ச வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவதற்கான சட்ட மசோதா நேற்று கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவை எதிர்த்து திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

மேலும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்திலும் 12 மணி நேர வேலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர், இந்நிலையில் தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய மசோதா குறித்து தொழிற்சங்கங்கள் பல கருத்துகளை தெரிவித்து வருவதால் ஏப்ரல் 24ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய மசோதா மீதான சாதக பாதகங்கள் அலசப்பட்டு முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment