தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் ….

by Lifestyle Editor

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், அவர்களில் 2 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரிந்தா ஐபிஎஸ், ஜமன் ஜமால் ஆகிய 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஏ.எஸ்.பி. பிரிந்தா பதவி உயர்வுடன் சேலம் மாநகர(வ) காவல் துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறப்பு பட்டாலியன் மதுரை காமண்டன்ட்டாக பாஸ்கரனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை ரயில்வே எஸ்பியாக சுகுணா சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் தாம்பரம் சட்டம், ஒழுங்கு துணை ஆணையராக கவுதம் கோயம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அய்மன் ஜமால் ஐபிஎஸ் ஆவடி சட்ட-ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment