எத்தன கோடி கொடுத்தாலும் என் தங்கச்சிய தரமாட்டேன்.. கனியின் அப்பாவுக்கு ஷாக் கொடுக்கும் ஷண்முகம்

by Editor News

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கனியின் அப்பா பணத்துடன் ஷண்முகம் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது வேலு மாணிக்கம் நீங்க கேட்குற பணத்தை கொடுக்கிறேன், ஒரே ஒரு முறையாவது என் பொண்ணை பார்க்க விடுங்க என்று சொல்கிறார்.

ஷண்முகம் எவ்வளவு கோடி கொடுத்தாலும் என் தங்கச்சியை விட்டு தர மாட்டேன் என்று சொல்ல, கனி வெளியே வந்து நான் என் அண்ணனை விட்டு வர மாட்டேன் என்று சொல்ல, வேலு மாணிக்கம் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறார். அடுத்து எல்லாரும் சாப்பிட உட்கார வைகுண்டம் எப்படியும் 1 கோடி ஆகும் போல, நம்மால் வாங்க முடியாது. இதை விட்டுடலாம் என்று சொல்ல, ரத்னாவும் ஆமாம் அண்ணா, நான் ஏதாவது ஒரு ஸ்கூல்லேயே வேலை பார்த்துக்கறேன் என்று சொல்ல, பரணியும் இப்போ இருக்கிற சூழ்நிலையில் கஷ்டம் தான் போல என்று சொல்கிறாள்.

இதை கேட்ட ஷண்முகம் நீ தானே கல்யாணம் பண்ணலாம் என்று சொன்னதுக்கு தங்கச்சியோட கனவை நிறைவேற்றுபவன் தான் நல்ல அண்ணன்னு சொன்ன, என்ன நடந்தாலும் என் தங்கச்சியோட கனவை நான் நிறைவேற்றுவேன் என்று சொல்லி சாப்பிடாமல் எழுந்து செல்கிறான். ஷண்முகம் சாப்பிடாமல் போக கனி அண்ணன் சாப்பிடும் போது தான் இப்படியெல்லாம் பேசுவியா என்று அப்பாவை திட்டி அவளும் சாப்பிடாமல் எழுந்து செல்ல, வைகுண்டம் நானும் சாப்பிடல என்று சென்று விடுகிறார்.

நைட் நேரத்தில் ஷண்முகம் தூங்காமல் யோசனையில் இருக்க, பரணி என்னாச்சு என்று கேட்க, எனக்கு என்ன பண்றதுனு தெரியல என்று வருத்தப்படுகிறான். இருந்தாலும் என் அப்பன் முருகன் என்னை கைவிட மாட்டான் என்றும் சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment