தோழியால் செந்திலுக்கு வர போகும் சிக்கல் …

by Lifestyle Editor
0 comment

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அமுதா, அன்னம், மாமா என மூவரும் படிக்கலயா என செந்திலிடம் கேட்க அவன் தடுமாறுகிறான். நிலைமையை சமாளிக்க காபி கேட்கிறான்.

அடுத்து அமுதா காபி போட போன நேரத்தில் தீபாவை கிளப்ப முயற்சி பண்ண அமுதா காபி கோப்பையுடன் வருகிறாள். செந்தில் அருகே வந்து இதை தீபாவுக்கு கொடுங்க என சொல்ல செந்தில் முகம் மாறுகிறது.

அடுத்து தன்னை பாடம் சொல்லி கொடுக்க வர சொன்னதே அமுதா தான் என தீபா சொல்ல செந்தில் வழிகிறான். பிறகு தீபா பாடம் சொல்லி தர செந்தில், அமுதாவை கவனிக்க அவளோ வேலை செய்தபடி இருக்கிறாள். பிறகு தீபா பாடம் சொல்லி கொடுத்து விட்டு கிளம்புகிறாள். போகும் போது இங்கே இருந்தால் அவன் படிக்க மாட்டான் உன்னை தான் சைட் தான் அடிப்பான் என சொல்கிறாள்.

மேலும் தீபா அமுதாவிடம் அம்மன் கோயில்ல வச்சு நான் பாடம் சொல்லி குடுக்குறேன் என சொல்லிவிட்டு செல்ல, மாணிக்கம் செந்திலை நக்கல் செய்கிறார். இந்த நேரத்தில் வடிவேலுவை வீட்டில் இறக்கி விட வரும் பழனி தீபாவை பார்க்கிறான்.

வடிவேலு தீபாவை பற்றி பழனியிடம் சொல்ல பழனி இவளை வைத்து ஏதாவது செய்யலாம் என திட்டம் தீட்டுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Related Posts

Leave a Comment