இந்நிலையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:- தமிழகத்தில் இன்று 36 சுங்கச்சாவடிகளிலும் செப்டம்பரில் 22 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படுள்ளது. விதிகளின் படிதான் சுங்கசாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என மத்திய அரசு சொல்கிறது. 5 சுங்கச்சாவடிகள் காலாவதியாகி செயல்பட்டதை அறிந்து மூட வலியுறுத்தியுள்ளோம். சுங்க கட்டணம் உயர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு பல முறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. பராமரிப்புக்காக வசூலித்தாலும் 40 சதவீதத்திற்கும் குறைவாகவே வசூலிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். எவ்வளவு தூரம் பயணிக்கிறோமோ அதற்கு ஏற்றால் போல் சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறை வர உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்” இவ்வாறு அவர் கூறினார்.
287
previous post