சாதனைப் படைத்த விஜய் டிவி முத்தழகு சீரியல் – குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்!

by Column Editor

அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் கதைக்களம் அமைந்துள்ளதால் மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பானாலும் பார்வையாளர்களின் பேராதரவைப் பெற்றுவிட்டாள் முத்தழகு.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியல் 100 நாட்கள் கடந்ததையொட்டி, சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விஜய் தொலைக்காட்சியில் தினமும் மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் முத்தழகு. இதில் கதையின் நாயகன் பூமி நாதனாக, ஆஷிஷ் சக்கரவர்த்தியும், நாயகி முத்தழகாக ஷோபனாவும் நடித்து வருகின்றனர்.

விவசாயம் செய்து கஷ்டப்படும் தைரியமான கிராமத்துப் பெண், பணக்கார ஹீரோ, என்ற கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் கதைக்களம் அமைந்துள்ளதால் மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பானாலும் பார்வையாளர்களின் பேராதரவைப் பெற்றுவிட்டாள் முத்தழகு.

பால்கான் டெலிவிஷன் மீடியா (Falcon Television Media) தயாரிக்கும் இந்த சீரியலில், சின்னத்திரை பிரபலங்கள் ஆனந்த் பாபு, லக்ஷ்மி வாசுதேவன், ஷோபனா, ஆஷிஷ் சக்ரவர்த்தி, தீபா, கீதா, சாந்தி, கணேஷ், ராஜ்மோகன், அட்ஷியா பாரதி, தர்ஷனா, சரத், ஷாலினி ராஜன், சைலு இம்ரான், மகேஷ், சுஜித் அன்சாரி, சந்துரு, மகாலக்ஷ்மி, பூவை சுரேஷ், பானு, பேபி திவ்யாஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ரசிகர்களை வெகுவாக கவர்ந்த முத்தழகு சீரியல் 100-வது நாளை கடந்ததையொட்டி, செட்டில் சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment