“நீங்க உள்ள இருக்கீங்கன்னு தெரியும்”… ராதிகா சொன்ன விஷயத்தால் ஷாக்கான கோபி !…

by Column Editor

பாக்கியலட்சுமி குறித்து ராதிகா சொன்ன விஷயம் கோபியை அதிர்ச்சியடைய வைத்துள்ள ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் விறுவிறுப்பாக சீரியலில் ‘பாக்யலட்சுமி’ சீரியலும் ஒன்று. சீரியல் பாக்யா மற்றும் கோபி கதாபாத்திரத்தை வைத்து ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் பாக்யாவின் அப்பாவித்தனம் இல்லத்தரசிகளை கவர்ந்த விஷயமாக உள்ளது. அதனால் இந்த சீரியலை ஏராளமானோர் பார்த்து வருகின்றனர்.‌ இந்த சீரியல் ரசிகர்களின் ஹார்ட்பிட்டுகளை எகிற வைக்கும் அளவுக்கு பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.

தனது தோழியை அடைய மனைவியை ஏமாற்றும் கணவன் குறித்த சாதாரண கதைதான் இந்த சீரியல். தற்போதைய கதைப்படி பாக்யாவை ஏமாற்றி விவாகரத்து செய்ய துடிக்கும் கோபி, பல்வேறு தந்திரங்களை செய்து வருகிறார். வழக்கம்போல் கோபி பாக்கியாவிடம் மாட்டிக்கொள்வது காட்சியை காட்சி எஸ்கேப் செய்கின்றனர்.

அதேபோன்று ராதிகா வீட்டிற்கு வரும் பாக்கியா, தனது கணவர் கோபியை பார்த்துவிடுவது போல் காட்சிகளை காட்டி எஸ்கேப் செய்துவிடுகின்றர். இந்நிலையில் இன்றைய தினத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் போன் பேசுவது போல் நடிக்கும் கோபியிடம் ஏன் பேச வரவில்லை என ராதிகா கேட்க சமாளிக்கிறார். நீங்க உள்ளே இருங்கீங்க என்று பாக்கியாவுக்கு தெரியும் என கோபிக்கு ராதிகா அதிர்ச்சி அளிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதனால் இன்றைய முழு எபிசோடை பார்த்தல் மட்டுமே கோபி மாட்டிக் கொண்டாரா அல்லது வழக்கம்போல் எஸ்கேப் ஆனாரா என தெரியும்.

Related Posts

Leave a Comment