உக்ரைனில் இருந்து ஒரு மில்லியன் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் – ஐ.நா. சபை தகவல்

by Column Editor

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. 8-வது நாளாக ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. போரை நிறுத்தவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், அதில் உடன்பாடு எட்டப்படாததால் நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது. ரஷ்ய ராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் தலைநகர் கிவ், மற்றும் கார்கிவ் நகரில் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் அங்கு வசிக்கும் வெளிநாட்டினர் தங்கள் நாட்டிற்கு திரும்பி வரும் நிலையில், உக்ரைன் மக்களும் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளான ரோமானியா, போலந்து, மால்டோவா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில், போர் பதற்றம் காரணமாக இதுவரை ஒரு மில்லியன் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

போரை நிறுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்துள்ளது.

Related Posts

Leave a Comment