உக்ரைன் மக்களுக்கு மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் – WHO

by Column Editor

உக்ரைன் நாட்டில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து 8-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தலைநகர் கிவ் மற்றும் கார்கிவ் நகரில் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். உயிருக்கு பயந்து உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். ரஷ்ய ராணுவத்தின் கடுமையான தாக்குதல் காரணமாக அங்கு மருத்துவ தேவை அதிகரித்துள்ளது. அவசர சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு மருந்து பொருட்கள் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளத்து. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானம் கூறியதாவது, உக்ரைனில் இருந்து வரும் தகவல்கள் மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறினார்.

லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருவதால், கொரோனா பரிசோதனை மேற்கொள்வது சவாலாக உள்ளதாகவும் இதனால் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் கூறினார்.

Related Posts

Leave a Comment