கண்ணம்மா பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடக்க போவது இதுதான்..முக்கிய திருப்பத்தில் பாரதி கண்ணம்மா!

by Column Editor

கண்ணம்மாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பாரதி வருவதாக, உண்மையை வேறு விதத்தில் கண்ணம்மா போட்டு உடைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் பிறந்த நாள் எபிசோடை எதிர்நோக்கி தான் சீரியல் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். லட்சுமி அப்பா யார்? என்ற உண்மையை கண்ணம்மா பிறந்த நாள் அன்று சொல்ல போவதாக ஏற்கெனவே கூறியிருந்தார். இந்நிலையில் அடுத்த வாரம் என்ன நடக்கும்? என ஆவலுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு DNA டெஸ்ட் எடுத்தால் முடியவேண்டிய சீரியலை கிட்டத்தட்ட 700 எபிசோடுகளுக்கு மேல் ஓட்டிக் கொண்டிருக்கின்றனர் சீரியல் குழு. டி.ஆர்.பி ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த பாரதி கண்ணம்மா சீரியல் ரோஷினியின் விலகலுக்கு பின்பு பல சறுக்கல்களை சந்தித்தது. நடிகர், நடிகைகள் பாதியில் இருந்து விலகி சென்றது, புதிய கண்ணம்மாவை ரசிகர்கள் சில நாட்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருந்தது என ஏகப்பட்ட தடங்கலுக்கு பின்பு இப்போது கதைக்களம் சூடுப்பிடித்து விட்டது. புது கண்ணம்மாவான வினுஷா தேவி நடிப்பில் கோல்ட் மெடல் வாங்கி விட்டார். அவரை இப்போது ரசிகர்கள் தூக்கி கொண்டாடி வருகின்றனர்.

இப்போது எபிசோடில் லட்சுமி அப்பா யார்? என்ற உண்மையை கண்ணம்மா ஊரைக் கூட்டி சொல்லப்போவதாக சபதம் எடுத்து, அதற்காக அவர்பாரதியிடம் கெஞ்சும் காட்சிகள் தான் ஒளிப்பரப்பாகி வருகின்றனர். அடுத்த வாரம், கண்ணம்மாவின் பிறந்த நாள் கொண்ட்டாட்ட எபிசோடுகள் ஒளிப்பரப்பாகும் என தெரிகிறது. இந்த கொண்டாட்டத்திற்கு பாரதி வருவாரா? லட்சுமிக்கு உண்மையை கண்ணம்மா சொல்வாரா? என ஏகப்பட்ட கேள்விகளுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்றைய எபிசோடில் கூடகண்ணம்மா வீடு தேடி வந்து பாரதியை பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வரும்படி கெஞ்சி கேட்டு அழுகிறார். லட்சுமி , பாரதிக்கு ஃபோன் செய்து அப்பா பற்றிய உண்மையை கேட்டு அழுகிறாள். குழந்தையிடம் உண்மையை சொல்ல முடியாமல் பாரதி ஃபோனை கட் செய்கிறார். லட்சுமி விடாமல் ஹேமாவுக்கு ஃபோன் செய்து இதைப் பற்றி சொல்கிறார். ஹேமாவும் பாரதியிடம் போய் லட்சுமி அப்பா யார்? என்று ஆவலுடன் கேட்கிறாள். மொத்தத்தில் பாரதி திரும்பும் இடமெல்லாம் லட்சுமி அப்பா பற்றிய பேச்சே ஒலிக்க, அவருக்கு வெறி ஆகுகிறது.

வரும் வாரத்தில் தான் என்ன நடக்கும்? என்பது ரசிகர்களுக்கு தெரிய வரும். அதே நேரம் இணையத்தில் கண்ணம்மாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பாரதி வருவதாக, உண்மையை வேறு விதத்தில் கண்ணம்மா போட்டு உடைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதே நேரம் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும், ப்ரோமோ, புகைப்படங்களும் இதுவரை வெளியாகாமல் சீரியல் குழு சஸ்பென்ஸாக வைத்துள்ளது.

Related Posts

Leave a Comment