388
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 3.
சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியும் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதில் உள்ள போட்டியாளர்களும் ரசிகர்களை கவர்நது வருகின்றனர்.
இந்நிலையில் ஆரம்பத்தில் இந்நிகழ்ச்சியில் புகழ் வரமாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கடந்த எபிசோட்டுகளாக புகழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.
இதனிடையே இன்று ஒளிபரப்பாகிய எபிசோட்டில் புகழ் தனது காதலி குறித்து பேசியுள்ளார். அதில் “5 வருடமாக நாங்கள் காதலித்து வருகிறோம். அவரை எனக்கு கலக்கப்போவது யாரு ஆடிஷன் போகும்போதில் இருந்தே தெரியும்.
அவர் பெயர் பென்சி, இந்த வருடம் கல்யாணம் செய்து கொள்வோம்” எனவும் புகழ் தெரிவித்துள்ளார்.