190
தமிழகத்தில் நடுத்தர குடும்பம் தொடங்கி பெரிய பணக்காரர்கள் வரை வீட்டில் ஒரு விசேஷம் என்றால் அங்கு தங்கத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு தங்கம் வாங்குவது என்றாலே குஷி தான். ஆனால் தற்போது தங்கம் விலையை கேட்டாலே தங்கம் வாங்கும் எண்ணம் போய்விடும்.
அந்த அளவிற்கு தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து 4604 ரூபாய்க்கும், சவரன் 36,832 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சென்னையில் 24 கார்ட் தங்கம் 4970 ரூபாய்க்கும்,சவரன் 39,760 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 66.90 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 66,900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.