தொடர்ந்து இரண்டாவது நாளாக கடகடவென குறைந்த தங்கம் விலை ..

by Lifestyle Editor

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வரும் நிலையில், இன்றும் விலை குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் இன்றைய விலை:

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 25 ரூபாய் குறைந்துள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் அதிகரித்து இந்த தங்கம் மறநாளில் இருந்தே குறைந்து வருவதுடன், இன்றும் சற்று குறைந்துள்ளது.

கடந்த திங்கள் கிழமையில் கிராம் ரூபாய் 5,040 ஆகவும், சவரன் ரூபாய் 40 ஆயிரத்து 320 ஆக இருந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து, 5,015 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 200 குறைந்து, ரூபாய் 40 ஆயிரத்து 120க்கு விற்கப்படுகின்றது.

தங்கத்தின் விலை ஏறிய வேகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்து வருவதால் நடுத்தர மக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்து. ஆனாலும் 40 ஆயிரத்திற்கு குறையாமல் இருப்பதால் மக்களிடையே சற்று கஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தற்போது தங்கத்தின் விலை குறைவதற்கு காரணம், பங்கு சந்தையில் வீழ்ச்சி, பெடரல் வங்கியின் அறிவிப்ப போன்ற சர்வதேச காரணிகளால் குறைவை நோக்கி செல்வதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதே போன்று வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ரூ.74 ஆகவும், கிலோவிற்கு ரூ.1000 அதிகரித்து ரூ.74,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

Related Posts

Leave a Comment