பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் நுழையும் ஓவியா? வைரலாகும் விடியோ

by Column Editor

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது தற்போது டாஸ்க்குடன் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. கடந்த நாளில் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறினார். இதனிடையே இன்றைக்கான ப்ரோமோவில் பிக்பாஸ் கொடுத்த திருடன் போலீஸ் டாஸ்கில் இரு அணிகளும் பயங்கர சண்டையுடன் மோதிக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் அல்டிமேட்டில் மீண்டும் ஓவியா கலந்துகொள்வது போன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி எப்போது தொடங்கப் போகிறது என்று செய்தி வெளியாக தொடங்கியதோ அப்போது இருந்து ஓவியா எப்போது அதில் கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்தே இவர் நுழைந்து விடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இவர் கலந்துகொள்ளவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தாலும் இவர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக தற்போது உள்ளே நுழைவார் என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கின்றனர்.

ஆனால், ரசிகர்கள் தற்போது ட்ரெண்ட் ஆக இருக்கும் ஓவியா நுழையும் வீடியோ எடிட்டிங் வேலையில் ஓவியாவின் ரசிகர்கள் தங்களுடைய மன சந்தோசத்திற்காக தங்களுக்கு பிடித்த மாதிரி எல்லாம் எடிட் செய்து அதை பகிர்ந்து வருகிறார்கள்.

இதையெல்லாம் வைத்து பார்த்தால், ஓவியா கலந்துகொள்கிறாரோ இல்லையோ? ஆனால் ஒரு முறையாவது பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்கு கெஸ்டாக வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment