இந்த வார எவிக்ஷனில் தப்பித்த மூன்று பேர் ?

by Editor News

இந்த வார எவிக்ஷனில் தப்பித்த அந்த மூவர் யார் என்பதை அறிவிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில், அடுத்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்க புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் கலந்துக்கொண்டு விளையாடினர். இந்த வாரம் தீபாவளி கொண்டாட்டம் இருந்ததால் எவிக்ஷன் இருக்காது என்று கூறப்பட்டது. ஆனால் அதையெல்லாம் கடந்து இந்த வாரம் கண்டிப்பாக எவிக்ஷன் இருக்கும் என்று கமல் அறிவித்தார்.

இதனால் அடுத்த எந்த போட்டியாளர் வெளியேற உள்ளார் என்ற பரபரப்பு பிக்பாஸ் வீட்டில் இருந்தது. அதோடு நேற்றைய தினம் தாமரை – பாவனி சண்டை பிக்பாஸ் வீட்டில் பெரிய பிரளயத்தையே உண்டாக்கியுள்ளது. அதேநேரம் பிக்பாஸ் வீட்டில் தாமரையை வைத்துதான் அனைத்து பிரச்சனையும் எழுந்து வருகிறது. இந்த விஷயத்தையெல்லாம் சனிக்கிழமையான நேற்று கமல் போட்டியாளர்களிடம் விளக்கமாக பேசினார்.

இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், லிவ்விங் ஏரியாவில் வரிசையாக பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இந்த வாரம் எவிக்ஷனில் யார் காப்பாற்றப்படுகிறார்கள் என்று பெயர்கள் எழுதப்பட்டிருந்தது. அவைகளில் பால் நிரப்பியுள்ள பாட்டில்களில் உள்ள பெயர்களை கமலிடம் கூறுகிறார் வருண். அதன்படி இந்த வாரம் எவிக்ஷனில் சிபி, மதுமிதா, ஐக்கி பெர்ரி ஆகிய மூன்று பேரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

Related Posts

Leave a Comment