“கோழிகளை வறுக்கலாமா… இல்லை சூப் வைக்கலாமா”… சிம்புவின் அட்டகாசமான ப்ரோமோ !

by Lifestyle Editor

போட்டியாளர்களின் கூவல் அதிகமாக இருக்கிறது என்று சிம்பு அட்டகாசப்படுத்தும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. ஓடிடியில் ஒளிப்பரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை ஏராளமான ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பல புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த டாஸ்க்கின்போது சண்டைகள், வாக்குவாதம் என பல விஷயங்கள் நடைபெறுகிறது.

அந்த வகையில் இந்த வாரம் கோழி கூவுசு என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் பாலா, அனிதா சம்பத், ஜூலி, நிரூப் ஆகியோர் இடையே பெரிய வாக்குவாதங்களும், சண்டைகளும் நடைபெற்றது. இது நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கி ரசிகர்களை கவர்ந்ததது. இன்று சனிக்கிழமை என்பதால் சிம்பு என்ட்ரி உள்ளது.

இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் பேசும் சிம்பு, இவர்களை கோழியாக மாற சொன்ன சேவலாக மாறி கொத்திக்கிட்டாங்க, கத்திக்கிட்டாங்க, அடிச்சிக்கிட்டாங்க, ஏன் துப்பிக்கிட்டாங்க என்று கூறினார். மேலும் அனைத்தையும் பார்க்கும்போது கூவல் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அதனால் இந்த கோழிகளை வறுக்கலாமா அல்லது சூப் வைக்கலாமா என்று கேள்வி எழுப்பும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment