இந்த ஆண்டு இவருக்கு பதில் இவராக தமிழ் சீரியல்களில் நடந்த 15 மாற்றம்…

by Column Editor

பொழுது போக்கு அம்சங்களில் சினிமாவுக்கு நிகராக, ஏன் அதைவிட அதிகமாக என்று கூட என்று சொல்லும் அளவிற்கு அதிக ரசிகர்களை கொண்டது சீரியல்கள். முன்பு இருந்தது போல அழுது வழியும் காட்சிகளே இருந்தாலும், தற்போது சீரியல்களில் பிரம்மாண்டங்கள் கூடியிருக்கிறது. சண்டைக் காட்சிகள், காதல் காட்சிகள் என அனைத்திலும் சினிமாவுக்கு நிகராக காட்சிப்படுத்தப்படுகிறது. முன்பு இருந்ததைவிட சீரியல்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். காரணம் பிரதான சேனல்களில் கிட்டத்தட்ட முக்கால்வாசி நேரம் சீரியல்கள் மட்டுமே ஒளிபரப்பப்படுகின்றன. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ். கலர்ஸ் தமிழ், ஜெயா டிவி. ராஜ் டிவி என தமிழ் தொலைக்காட்சிகளில் மட்டும் 74 சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சேனல், ஒவ்வொரு சீரியல், ஒவ்வொரு நடிகர்கள் பிடித்தமானவர்களாக இருக்கிறார்கள். வெள்ளித்திரையில் நடிப்பவர்களைக் காட்டிலும், சீரியல் நடிகர்கள் மக்களிடம் நெருக்கமாகிவிடுகிறார்கள்.. அப்படி இந்த ஆண்டு (2021) தமிழ் சீரியல்களில் இவருக்கு பதில் இவராக அரங்கெறிய மாற்றங்களைப் பார்க்கலாம்.

1. விஜய் டிவியில் ஆனந்தம் படத்தின் எலாஸ்டிக் வெர்ஷனாக ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் , தம்பிகள் 4 பேரின் பாச பந்தத்தை வெளிபடுத்தும் இந்த சீரியல் வெகுஜன மக்களால் ரசித்துப் பார்க்கப்படுகிறது. இந்த சீரியலில் கடைசி தம்பி கண்ணனுக்கு ஜோடியாக முதலில் விஜே ஐஸ்வர்யா நடித்து வந்தார். திடீரென யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில், அவர் மாற்றப்பட்டார். புதிய ஐஸ்வர்யாவாக சாய் காயத்ரி நடித்து வருகிறார்.

2. விஜய் டிவியில் 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா.. டாப் ரேட்டிங்கில் இருந்து வந்த இந்த சீரியலில் அகில் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த அகிலன் பட வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக சுகேஷ் நடித்து வருகிறார்.

3. பல வாரங்கள் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தவர் ரோஷினி. கடந்த 3 ஆண்டுகளாக இந்த சீரியலில் தன் உழைப்பை போட்டு வந்த அவர், திடீரென கடந்த மாதம் தொடரிலிந்து விலகினார். அவருக்கு பதிலாக சீரியல் குழு அவருடைய தோற்றத்தோடு ஒத்து போகிற ஒரு பெண்ணையே தேடி பிடித்திருக்கிறார்கள். தற்போது கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் விணுஷா தேவி நடித்து வருகிறார்.

4. இல்லத்தரசிகளின் ஃபேவரைட் சீரியலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ரேவதி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிஃபர் திடீரென சீரியலில் இருந்து விலகினார். அவர் கர்ப்பமாக இருந்ததாலு, தனது கதாப்பாத்திரம் எதிர்மறையாக மாற்றப்படுவது தனது பிடிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது அவரது கேரக்டரில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

5. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முன்னொரு காலத்தில் நம்பர் 1 சீரியலாக ஒளிபரப்பாகி வந்த தொடர் செம்பருத்தி. இதில் ஹீரோவாக நடித்து வந்த கார்த்திக் ராஜ், வெள்ளித்திரையில் நடிக்க இருந்ததால் சீரியலில் இருந்து விலகினார். தற்போது அவருடைய ஆதி கேரக்டரில் யூடியூப் பிரபலம் அக்னி நடித்து வருகிறார்.

6. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் பாப்புலரான சீரியல் ரோஜா. பல வாரங்கள் டிஆர்பியில் நம்பர் 1 இடத்தில் இருந்துள்ளது. இந்த சீரியலில் வில்லியாக மிரட்டி வந்தவர் ஷாமிலி.. இவர் கர்ப்பமாக இருந்ததால் இந்த சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதில் தொகுப்பாளினி அக்‌ஷயா நடித்து வருகிறார்.

7. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சீரியல் காற்றுக்கென்ன வேலி.. இதில் கதாநாயகன் சூர்யா கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த தர்ஷன் , சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக கன்னட நடிகர் சுவாமிநாதன் நடித்து வருகிறார்.

8. சன் டிவியில் டெலிகாஸ்ட் ஆகும் பாப்புலரான சீரியல் பூவே உனக்காக… பிக்பாஸ் டிஆர்பியையே ஓரங்கட்டிய சீரியல் என்ற புகழ் இந்த தொடருக்கு உண்டு.. இதில் கதிர் கதாப்பாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வந்த அருண் திடீரென விலகினார். அதனைத் தொடர்ந்து தற்போது அசீம் , புகழாக நடிக்கிறார்.

9. கொரோன ஊரடங்குக்கு பிறகு தொடங்கப்பட்ட சீரியல் நாம் இருவர் நமக்கிருவர் தொடரின் 2வது பாகம்.. இதில் முதலில் மகாலட்சுமி கதாப்பாத்திரத்தில் ரச்சிதா நடித்து வந்தார். அவர் சீரியலில் இருந்து விலகியதை அடுத்து அரண்மனை கிளி ஜானு நடிக்கிறார்.

10. சன் டிவியில் மதிய வேளையில் ஒளிபரப்பாகும் சீரியல் மகராசி. இதில் கதாநயகியாக நடித்து வந்த திவ்யா ஸ்ரீதர் விலகியதால், தற்போது அந்த கதாப்பாத்திரத்தில் ஸ்ரித்திகா நடித்து வருகிறார்.

11. ப்ரைம் ஸ்லாட்டில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. இதில் அஸ்வின் கதாப்பாத்திரத்தில் முதலில் வெங்கட் நடித்து வந்தார். கொரோனா ஊரங்கிற்குப் பிறகு அவர் அந்தத் தொடரில் இருந்து விலகினார். தற்போது அவருக்கு பதிலாக சங்கரேஷ்வர் நடித்து வருகிறார்.

12. அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் தொடர் வானத்தைப் போல.. இதில் துளசி கேரக்டரில் முதலில் நடித்து வந்த ஸ்வேதா விலகினார். அவரைத் தொடர்ந்து அந்த ரோலில் தற்போது மான்யா நடித்து வருகிறார்.

13. இதே வானத்தைப் போல சீரியலில் சின்ராசுவாக நடித்து வந்த தமன் விலகியதை அடுத்து , அந்த ரோலில் ஸ்ரீ நடிக்கிறார்.

14. இதேபோல் திருமதி ஹிட்லர் சீரியலில் முதல் மருமகளாக அர்ச்சனா ரோலில் நடித்து வந்த சௌமியா ராவ் மற்றப்பட்டார். அவருக்கு பதிலாக தற்போது விஜே மகாலட்சுமி நடித்து வருகிறார்.

15. சன் டிவியில் பாப்புலராக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டவர் இல்லம். இந்த தொடரில் தேன்மொழி கதாப்பாத்திரத்தில் நடித்துவந்தவர் விலகியதால், தற்போது அந்த ரோலிம் மதுமிதா நடித்து வருகிறார்.

Related Posts

Leave a Comment