விருந்தோம்பல் வணிகங்களுக்கு 40 மில்லியன் பவுண்டுகள் வழங்க வடக்கு அயர்லாந்து தீர்மானம்!

by Column Editor

வடக்கு அயர்லாந்தில் உள்ள சமீபத்திய கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட விருந்தோம்பல் வணிகங்களுக்கு, 40 மில்லியன் பவுண்டுகள் மானியம் வழங்கப்படவுள்ளது.

தனது துறை 3,000க்கும் மேற்பட்ட விருந்தோம்பல் வணிகங்களுக்கு 40 மில்லியன் பவுண்டுகள் ஆதரவை வழங்கும் என நிதியமைச்சர் கோனார் மர்பி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இரவு விடுதிகள் டிசம்பர் 26ஆம் திகதி ஜி.எம்.டி.யில் இருந்துமூடப்படும். டிசம்பர் 27ஆம் திகதி முதல் விருந்தோம்பல் அரங்குகள் டேபிள் சேவையை மட்டுமே வழங்க வேண்டும். மேலும் ‘ஆறு விதிகள்’ என்ற கட்டுப்பாடுகளும் திரும்பும். நிலம் மற்றும் சொத்து சேவைகள் மூலம் மானியங்கள் வழங்கப்படும்.

இதுகுறித்து முதலமைச்சர் பால் கிவான் கூறுகையில், ‘விருந்தோம்பல் துறையில் உள்ள வணிகங்கள் இந்த ஆண்டின் மிகவும் பரபரப்பான நேரமாக இருக்க வேண்டும் என்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றன’ என கூறினார்.

Related Posts

Leave a Comment