குடியரசாக மாறியுள்ள பார்படோஸிற்கு பிரித்தானிய ராணி வாழ்த்து

by Column Editor

பிரிட்டிஷ் காலனித்துவ நாடக இருந்த பார்படோஸ் குடியரசாக மாறியுள்ள நிலையில் பிரித்தானிய ராணி தனது வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார்.

அனைத்து பார்படோஸ் மக்களும் எதிர்காலத்தில் மகிழ்ச்சியாகவும் அமைதி மற்றும் செழிப்புடன் வாழ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்திலும், நாட்டின் முதல் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட சாண்ட்ரா மேசனுக்கும் மக்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

1966 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுதந்திரம் பெற்ற பார்படோஸ் நாட்டிற்கு தான் முதன்முதலில் விஜயம் செய்தமையையும் ராணி நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும் இந்த நன்னாளில் தனது மகன் இளவரசர் சார்ள்ஸ் பார்படோஸில் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment