பண்டிகை காலத்தில் தாழ்மையுடன் நடந்து கொள்ளுங்கள்: போப் ஆண்டவரின் கிறிஸ்மஸ் செய்தி!

by Column Editor

கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் தாழ்மையுடன் நடந்து கொள்ளுங்கள் என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஆற்றிய உரையில், கார்டினல்கள், பிஷப்புகள் மற்றும் அதிகார வர்க்கத்தினருக்கு ஒரு செய்தி விடுத்துள்ளார்.

அந்த செய்தியில் அவர், ‘கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் தாழ்மையுடன் நடந்து கொள்ளுங்கள். தற்பெருமை, தன்னலம், கவசத்தின் மினுமினுப்பு உங்கள் ஆன்மிக வாழ்க்கையை சிதைத்து தேவாலயத்தின் பணியை சீர்குலைத்து விடுகிறது.

தாழ்மை உள்ளவர்கள கடந்த காலத்தைப்பற்றி மட்டுமல்லாமல் எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்டவர்கள், ஏனென்றால் அவர்களுக்கு முன்னோக்கி பார்க்கவும், தங்கள் கிளைகளை பரப்பவும், கடந்த காலத்தை நன்றியுடன் நினைவில் கொள்ளவும் தெரியும்.

அதே நேரத்தில் பெருமிதம் உள்ளவர்கள் வெறுமனே திரும்பத்திரும்ப, கடினமாக தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் அறிந்ததைப் பற்றி உறுதியாக நிற்கிறார்கள். புதியவற்றின் மீது பயப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்களால் கடடுப்படுத்த முடியாது’ என கூறினார்.

Related Posts

Leave a Comment