ப்ளாக் ஃப்ரைடே சீசனில் கொள்வனவு மோசடிகள் 17 சதவீதம் அதிகரிப்பு!

by Column Editor

கடந்த ஆண்டு ப்ளாக் ஃப்ரைடே சீசனில் கொள்வனவு மோசடிகள் 17 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் சராசரியாக 538 பவுண்டுகளை இழந்துள்ளதாகவும் ஒரு வங்கி அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்க்லேஸ் நிறுவனத்திற்கான ஒரு கணக்கெடுப்பில் பாதிக்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் அதாவது 59 சதவீதத்தினர் இந்த பண்டிகைக் காலத்தில் நல்ல டீல்களை எதிர்பார்க்கும் போது தங்கள் வழக்கமான நடத்தையை மாற்றிக்கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

38 சதவீதத்தினர் நவம்பர் 26ஆம் திகதி ப்ளாக் ஃப்ரைடே விற்பனையில் கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ப்ளாக் ஃப்ரைடே கடைகளில், கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியினர் (18 சதவீதம்) பொருட்களை முடிந்தவரை விரைவாக வாங்குவதற்கு கடந்த ஆண்டு அழுத்தம் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

மேலும், 14 சதவீத பேர் குறிப்பாக நல்ல விலைகள் இருந்தால், அறிமுகமில்லாத வலைத்தளங்களில் கொள்வனவு செய்வதாகக் கூறினர்.

Related Posts

Leave a Comment