பிரித்தானிய பிரதமர் பதவியில் மாற்றமா?

by Lifestyle Editor

பிரித்தானியாவின் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்குக்கு பதிலாக வேறொருவரை பிரதமராக்க அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுவருவதாக வெளியான செய்தி, பிரித்தானிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிஷி சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான லீ ஆண்டர்சன் வெளியிட்ட சில கருத்தக்களே இவ்வாறு சர்ச்சைஏற்படுத்தியிருந்தது.

கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெரிய தொகை ஒன்றை நன்கொடையாக கொடுத்தவரான Frank Hester என்பவர் இன ரீதியாக முன்வைத்த விமர்சனம் மற்றும் ருவாண்டா திட்டம் மீது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள சலிப்பு போன்றவை கடந்த சில வாரங்களாக பிரதமர் ரிஷிக்கு பிரச்சினைகளை உண்டாக்கின.

இந்நிலையில், ரிஷி சுனக்குக்கு பதிலாக பென்னி மோர்டாண்ட் என்ற பாராமன்ற உறுப்பினரை பிரதமராக்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் திட்டமிட்டுவருவதாக தகவல்களும் கசிந்தன.

இதனையடுத்து, பிரதமர் ரிஷி “கடைசி இருக்கை பாராளுமன்ற உறுப்பினர்கள்“ என அழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன் உரையாற்றினார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்ட பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்,

“கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்வேண்டும். தனக்கெதிரான சதிகளும், அதிருப்தியும், தன்னைக் காயப்படுத்தவில்லை. அவை அனைத்து கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையே காயப்படுத்துகிறது” என தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவர், ரிஷி சுனக்குக்கு பதிலாக வேறொருவரை பிரதமராக்கும் திட்டம் தோல்வியடைந்ததாக தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment