இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை ஊழியர்களுக்கு கட்டாய தடுப்பூசி அவசியமா?

by Column Editor

இங்கிலாந்தில் உள்ள தேசிய சுகாதார சேவை ஊழியர்களுக்கு கட்டாய கொவிட் தடுப்பூசிகளை இரத்து செய்யலாமா வேண்டாமா என்பதை அமைச்சர்கள் கூடி விவாதிக்கவுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள முன்கள தேசிய சுகாதார சேவை ஊழியர்கள், ஏப்ரல் 1ஆம் திகதிக்குள் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும்.

இதற்கமைய அவர்கள் அனைவரும் வியாழக்கிழமைக்குள் முதல் டோஸ் அளவை பெற்றிருக்க வேண்டும்.

ஏப்ரல் மாதத்திற்குள் அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவிட்டால், அவர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள் அல்லது பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.

தற்போது வரை தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் தடுப்பூசி போடாமல் உள்ளனர்.

கடந்த வாரம், சுகாதார செயலாளர் சஜித் ஜாவித், ‘தடுப்பூசி தேவை மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தடுப்பூசி போடுவது தேசிய சுகாதார சேவை ஊழியர்களின் கடமை’ என்று கூறினார்.

Related Posts

Leave a Comment