வேல்ஸில் கொவிட் கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படுகின்றன: முதலமைச்சர் டிரேக்ஃபோர்ட்!

by Column Editor
0 comment

ஒமிக்ரோன் மாறுபாட்டைச் சமாளிக்க கொண்டுவரப்பட்ட பெரிய நிகழ்வுகள் மற்றும் வணிகங்களுக்கான கொவிட் கட்டுப்பாடுகள் புதிய திட்டங்களின் கீழ் இரண்டு வாரங்களில் அகற்றப்படும் என வேல்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த தளர்வு, எதிர்க்கட்சிகளின் பெருகிவரும் அழுத்தத்தையும், தொற்று எண்ணிக்கையின் வீழ்ச்சியையும் தொடர்ந்து வருகிறது.
இதன்போது, வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதிகள் முதலில் நீக்கப்படும்.

பூஸ்டர் பிரச்சாரத்தின் வெற்றியானது, 1.8 மில்லியன் பேர் கூடுதல் டோஸ் பெற்றுள்ளதால், கட்டுப்பாடுகளை நீக்க முடிந்தது என்று வேல்ஸ் அரசாங்கம் கூறியது.

வேல்ஸ் அரசாங்கத்தால், டிசம்பர் 26ஆம் திகதி கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment