ஒமிக்ரோன் வைரஸ் : மேலும் மூன்று நோயாளிகள் ஸ்கொட்லாந்தில் அடையாளம்

by Column Editor

ஸ்கொட்லாந்தில் ஒமிக்ரோன் கொரோனா மாறுபாட்டின் மேலும் மூன்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்று நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

இப்போது லனார்க்ஷயர் பகுதியில் ஐந்து நோயாளிகளும் என்ஹெச்எஸ் கிரேட்டர் கிளாஸ்கோ மற்றும் க்ளைடில் நான்கு நோயாளிகளும் உள்ளதாக ஸ்கொட்லாந்தின் சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் ரக்பி சர்வதேச போட்டி கடந்த 13 ஆம் திகதி ஸ்கொட்லாந்தின் எடின்பரோவின் முர்ரேஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment