இல்லாத விஷயத்தை, இருப்பதாக காட்டி குழப்புவதா என்று கேள்வி எழுப்பி கோவமாக இமான் அண்ணாச்சி சொல்லும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் ப்ரேக்கிங் நியூஸ் டாஸ்க் விளையாடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ப்ரோமோக்களில் தாமரைச்செல்வி மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் கடுமையாக மோதிக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றது. இதனால் இன்றைய எபிசோடு விறுவிறுப்பாக செல்லும் என்று ரசிகர்கள் குஷி உள்ளனர்.
ஆனால் தற்போது அதைவிட விறுவிறுப்பை கூட்டும் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில், நிரூப்பால் டென்ஷனான இமான் அண்ணாச்சியின் காட்சிகள் காட்டப்படுகிறது. இந்த டாஸ்க்கின்படி அபிஷேக் மற்றும் சிபி நிகழ்ச்சி தொகுப்பாளராக செயல்படுகின்றனர். அப்போது செய்தியாளராக இருக்கும் பிரியங்கா, விருந்தினர்களாக வந்துள்ள நிரூப் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகிய இருவரிடம் கேள்வி கேட்கிறார்.
முதலில் நிரூப்பிடம் கேள்வி கேட்கும் பிரியங்கா, நீங்க, ஏற்கனவே கவலையுடன் இருக்கும்போது மேலும் உங்களை அந்த இடத்திற்கு தள்ளப்பட்ட நபர் யார் என்று கேட்கிறார். அதற்கு, இமான் அண்ணாச்சிதான் அது என்று கூறுகிறார். இதனால் டென்ஷனாகும் இமான் அண்ணாச்சி, இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக காட்டிக் கொண்டு மக்களை குழப்ப நினைப்பதற்காக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு எழுந்து செல்கிறார். இதனால் இன்றைய எபிசோடு விறுவிறுபாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Day58 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/NvCrvZCvae
— Vijay Television (@vijaytelevision) November 30, 2021