நம் காலத்தின் நாயகர்களின் கதை ‘83’… டிரெய்லரை பெருமிதத்துடன் வெளியிட்ட கமல் !

by Column Editor

உலகக்கோப்பையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘83’ தமிழ் டிரெய்லரை நடிகர் கமல் வெளியிட்டுள்ளார்.

உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 1983-ஆம் ஆண்டுதான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்திய அணி வென்றது. கபில்தேவ் தலையிலான இந்தியா அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வென்று சாதனை படைத்தது மறக்கமுடியாக நிகழ்வாக இருக்கிறது. இந்த போட்டியில் தமிழக வீரர் ஸ்ரீகாந்த்தும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் இந்த சாதனை தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. ‘83’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என 4 மொழிகளில் தயாராகியுள்ளது. இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோன், தஹிர் ராஜ் பாசின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார்.

இந்த படம் அடுத்த மாதம் 24-ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நம் காலத்தின் நாயகர்களின் கதையான ‘1983’ திரைப்படத்தின் டிரெய்லரை பெருமிதத்துடன் அறிமுகம் செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். உலகக்கோப்பையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment