ஒமைக்ரான் வைரஸ் எதிரொலி – கோவையில் கட்டாயமாகிறது முக கவசம்

by Column Editor

ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகலையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உலக நாடுகள் அறிவித்துள்ளன.

இந்தியாவிலும் பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் மாஸ்க் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபாரதம் விதிக்க திட்டமிட்டுள்ளதாக ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து சிங்காநல்லூர் சுற்றுப்பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை வீடு வீடாகச் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சமீரன் : கோவையில் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பை குறைத்துள்ளோம், ஒமைக்ரான் வைரஸ் புதிதாக வந்துள்ளது.

ஆகவே கோவை விமான நிலையத்தில் வெளி நாட்டில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் பயணிகள் வெளியே அனுப்பபடுவதாகவும் மாஸ்க் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபாரதம் விதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

அதே சமயம் கோவை மாவட்ட எல்லையான வாளையார் பகுதியில் மீண்டும் முகாம் அமைத்து கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment