மிரட்டும் ஒமைக்ரான் – 7 நாள் தனிமையை கட்டாயமாக்கிய பெங்களூர்

by Column Editor

‘ஒமைக்ரான்’ அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளிலிருந்து பெங்களூர் வருபவர்கள் அனைவரும் 7 நாட்கள் கட்டாய தனிமையில் வைக்கப்படுவார்கள் என பெங்களூரு சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

கொரோனா தொற்றின் தாக்கம் இன்று வரையும் குறையாத நிலையில் புதிய வகை ‘ஒமைக்ரான்’ கொரோனா தொற்றால் மீண்டும் உலகம் முழுவதும் பதற்றமான நிலை உருவாகி வருகிறது.

தென் ஆப்பிரிக்கா , இஸ்ரேல் நாடுகளில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று அதிகளவில் வேகமாக பரவி வருகிறது.

இந்தவகை தொற்று கொரோனாவைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாக பரவும் அபாயம் இருப்பதால் பல நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் தென் ஆப்பிரிக்காவிலிருந்து கர்நாடகம் வந்த 2 பயணிகளுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து பெங்களூர் கிராமப்புற மாவட்ட சுகாதார அதிகாரி திப்பேசுவாமி ‘ வெளிநாட்டிலிருந்து பெங்களூரு வரும் பயணிகள் கட்டாயமாக 7 நாள் தனிமையில் வைக்கப்படுவார்கள்’ என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment