இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு..ஷிவ்தாஸ் மீனா

by Lifestyle Editor

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு என்றும் தென்மாவட்டங்களில் ஒரு சில இடத்தில் மட்டுமே அதிகனமழை பெய்யும் என தெரிவித்திருந்தது என்றும் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா பேட்டி அளித்துள்ளார்.

தென்மாவட்ட பெருமழை பாதிப்பில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறிய தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, தூத்துக்குடி மாவட்டத்தில் 60% இடங்களில் மின்சாரம் இல்லை என்றும் தண்ணீர் வடிந்ததும் மின் இணைப்பு சீர் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்,.

மேலும் ராமநாதபுரம், கன்னியாகுமரியில் இருந்து 326 படகுகள் கொண்டு வரப்பட்டு மீட்பு பணி நடக்கிறது என்றும், வெள்ளம் வடிந்ததும் சேதம் கணக்கிடப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் இதுபோல வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை பெய்யும் போது எந்த நடவடிக்கையும் பலனளிக்காது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

Related Posts

Leave a Comment