கேரளாவை அலறவிடும் கொரோனா..!

by Lifestyle Editor

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், ஒரே நாளில் 292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் புதிதாக 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவானதாக இருந்தாலும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 292 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கேரளா அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Related Posts

Leave a Comment