இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 4,868 ஆக அதிகரிப்பு…

by Column Editor

இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,868 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைரானின் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கொரொனா வைரஸின் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கி விட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் பலருக்கு, ஒமைக்ரான் அறிகுறிகள் இருந்து வருகின்றன. அதனால் ஒமைக்ரான் வைரஸ் குறித்த அச்சமும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளது. இதுவரை 4,868 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிட்ராவில் 1,281 பேரும், ராஜஸ்தானில் 645 பேரும், டெல்லியில் 546 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கர்நாடகாவில் 479 பேருக்கும், கேரளாவில் 350 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 294 பேருக்கும் , உத்தரப் பிரதேசத்தில் 275 பேருக்கும், குஜராத்தில் 236 பேருக்கும் மற்றும் தமிழகத்தில் 185 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் அடுதடுத்த இடங்களில் ஹரியானா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் அதிக பாதிப்புடன் இருந்து வருகின்றன. நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 1805 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3,063 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment