RRR படத்தில் 20 நிமிட காட்சிக்காக நடிகை ஆலியா பட் இவ்வளவு கோடி சம்பளம் பெற்றாரா?

by Column Editor

இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி பிரம்மாண்டத்திற்கே பிரம்மாண்டம் காட்டும் ஒரு இயக்குனர்.

நான் ஈ, பாகுபலி என வெற்றிப்படங்களை இயக்கி மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்துவிட்டார். இப்போது ராஜமௌலி அடுத்த ஒரு பெரிய படம் இயக்கியுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண் போன்ற நடிகர்களை வைத்தும் பாலிவுட் நடிகர்களான ஆலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர்களை வைத்து ஆர்ஆர்ஆர் என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.

கடந்த ஜனவரி 9ம் தேதி படம் வெளியாகி இருக்க வேண்டும் ஆனால் கொரோனா அச்சம் காரணமாகவும், 50 சதவீதம் மட்டுமே திரையரங்குகளில் அனுமதி என்பதால் பட ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்த பட ரிலீஸிற்காக படக்குழு பெரிய அளவில் புரொமோஷன் செய்தார்கள், ஆனால் அப்படியே இது வீணானது.

படத்தில் நடிகை ஆலியா பட் காட்சி வெறும் 20 நிமிடம் மட்டுமே வருமாம், அதற்காக அவருக்கு ரூ. 9 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம், அஜய்தேவ்கனுக்கு ரூ. 35 கோடி சம்பளம் என கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment