ஒரேநாளில் 621 பேர் கொரோனாவுக்கு பலி… அதிர்ச்சியில் மத்திய, மாநில அரசுகள்!!

by Editor News

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,774 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 8,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று கொரோனா தினசரி பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 465 பேர் கொரோனாவால் பலியான நிலையில் இன்று மீண்டும் உயிரிழப்பு எண்ணிக்கை என்பது அதிகரித்து காணப்படுகிறது. இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,68,554 ஆக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் கொரோனாவிலிருந்து 9,481 பேர் குணமாகியுள்ள நிலையில், இதன் மூலம் கொரோனாவால் குணமானோர் மொத்த எண்ணிக்கை 3,39,98,278ஆக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை1,05,691 ஆகஉள்ளது. அத்துடன் இந்தியாவில் இதுவரை 1,21,94,71,134 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment