243
தனது 14 வயதில் இருந்து சின்னத்திரையில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர் திவ்யதர்ஷினி.
இவருக்கு டிடி என்கிற செல்ல பெயரும் உண்டு. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்கள் தீர்ப்பு’ நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார்.
இதன்பின், விஜய் டிவியில் தொடர்ந்து பல நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி வந்த டிடி-க்கு, காப்பி வித் டிடி எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதன்பின் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான டிடி, இன்று வரை ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் பெரும்பாலும் இன்ஸ்டாகிராமில் மார்டன் உடையில் புகைப்படங்களை வெளியிடும் டிடி, தற்போது Traditional உடை அணிந்து அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.