மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை கிராண்ட் பினாலே… டைட்டில் பட்டம் வென்ற சூப்பர் ஜோடி…

by Editor News

‘மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை’ டைட்டில் பட்டம் பெற்றது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடம் எப்போது தனி இடம் ஒன்று உள்ளது. அந்த வகையில் தற்போது ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை’. கடந்த சில மாதங்களாக ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு ஆறு ஜோடிகள் தகுதி பெற்றன. அதில் யுவராஜ் – காயத்ரி, யோகேஷ் – நந்தினி, சரத்- கீர்த்தி, ஜேக் – ரோஷினி, ராஜ்மோகன் – கவிதா மற்றும் வினோத் – ஐஸ்வர்யா ஆகிய ஜோடிகள் உள்ளனர். இவர்கள் அனைவருமே தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று 3 மணிக்கு கிராண்ட் பினாலே நடைபெற உள்ளது. இதில் சரத் – கீர்த்தி ஜோடி ஜோடி டைட்டில் பட்டத்தை வென்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஒளிப்பரப்பாக உள்ள இந்நிகழ்ச்சி நேற்றே பதிவு செய்யப்பட்டதால் இந்த தகவல் வெளியாகியுள்ளது. டைட்டில் பட்டம் வென்ற சரத் – கீர்த்தி ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று இந்த நிகழ்ச்சியின் ஜேக்-ரோஷினி ஜோடி ரன்னர் அப்பாக தேர்வாகியுள்ளனர்.

Related Posts

Leave a Comment