கணவர் தப்பித்து விட்டதால் புதுப்பெண் தற்கொலை

by Lifestyle Editor

விருப்பமில்லாத திருமணத்தால் கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற முயற்சி வெளியே தெரிந்து விட்டதால் அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் புதுப்பெண்.

தேனி மாவட்டத்தில் கம்பம் பகுதியைச் சேர்ந்த கவுதம், அதே கம்பம் மந்தையம்மன் கோவில் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கடந்த நவம்பர் 10ஆம் தேதியன்று இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது.

திருமணம் முடிந்து 28 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், கடந்த 8-ஆம் தேதியன்று புவனேஸ்வரி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது வெளியே சென்றவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது புவனேஷ்வரி அறை பூட்டி இருந்திருக்கிறது. வெகு நேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது புவனேஸ்வரி தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.

உடனே போலீசுக்கு தகவல் சொல்ல, கம்பம் வடக்கு போலீசார் வந்து புவனேஸ்வரி உடலை கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதன் பின்னர் வடக்கு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது கணவர் கௌதமிடம் துருவித்துருவி விசாரணை நடத்தியதில் தனது மனைவி புவனேஸ்வரி தன்னை கொலை செய்ய முயன்றார். அந்த முயற்சி வெளியே தெரிந்து விட்டதால் தான் அச்சத்தில் இருந்த நிலையில்தான் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று அதிரவைத்திருக்கிறார்.

திருமணத்தில் புவனேஸ்வரிக்கு விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறது. பெற்றோரின் கட்டாயத்தால் என்னை பெண்ணை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். அதனால் என்னுடன் வாழ பிடிக்காமல் திருமணத்திற்குப் பின்னர் கூலிப்படையை ஏவி என்னை கொலை செய்ய முயன்றிருக்கிறார். கூடலூர் தொட்டி பாலம் அருகே காரை மோதி என்னை கொலை செய்ய முயன்றார்கள். அதிலிருந்து தப்பிக்க விட்டேன். ஆனால், இந்த விவகாரம் எனக்கு தெரிந்து விட்டதால், என் மூலமாக வெளியே தெரிந்து விட்டதால் அது குறித்த அச்சத்திலேயே இருந்து வந்தார் புவனேஸ்வரி. அது எனக்கு நன்றாக தெரிந்தது. அதனால்தான் புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து கௌதம் கொடுத்த வாக்குமூலத்தின் படி அவரை கொலை செய்ய முயன்ற நிரஞ்சன்ராஜா, பிரதீப், ஆல்பர்ட், மனோஜ்குமார், ஜெயசக்தி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ஜெட்லியைத் தேடி வருகின்றார்கள்.

Related Posts

Leave a Comment