திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மருமகளை பிடிக்க 3 தனிப்படை… சிறுமி கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரத்தில் போலீஸ் அதிரடி..

by Lifestyle Editor

பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் சென்னை திருவான்மியூரில் தனது மனைவி மெர்லினா மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சென்னை உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ரேகா என்ற சிறுமி வீட்டு வேலைக்கு சேர்ந்தார். வேலை அதிகமாக இருந்ததால் தான் தனது வீட்டிற்கே செல்வதாக கூறியுள்ளார் சிறுமி. ஆனால் அதனை ஏற்காத ரேகாவும் அவரது கணவரும் சிறுமியை கடுமையாக தாக்கியுள்ளனர்.

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி கண்ணீர்மல்க கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. அதில் தன ஆடைகளை களைந்து அடித்து துன்புறுத்தியதாகவும், சிகரெட்டால் சுட்டு சித்ரவதை செய்தாகவும் கூறியிருந்தார். நியூஸ் பேப்பரை கொளுத்தி முகத்தில் வைத்ததாகவும் இதனால் ஏற்பட்ட காயங்களுக்குகூட தனக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

சிறுமி நடந்த கொடுமைகள் குறித்து அதிமுக, பாஜக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் வீட்டு வேலைக்காக சென்ற சிறுமியை கொடுமைப்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது போலீசார் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் திருவான்மியூரில் உள்ள அவர்களின் வீட்டிற்கு நீலாங்கரை போலீசார் விசாரணைக்கு சென்றனர். அப்போது அவர்களின் வீடு பூட்டிக்கிடந்தது. இதையடுத்து திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணனும் அவரது மனைவி மெர்லினாவும் தலைமறைவானதாக கூறப்பட்டது. இதையடுத்து போன் சிக்னலை வைத்து போலீசார் அவர்கள் இருவரையும் தேடி வருவதாக தகவல் வெளியானது.

ஆனால் இதுவரை அவர்கள் இருவரும் எங்கே இருக்கிறார்கர்கள் என்ற தகவல் கிடைவில்லை. இந்நிலையில் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மறறும் அவரது மனைவி மெர்லினாவையும் பிடிக்க போலீசார் 3 தனிப்படைகள் அமைத்துள்ளனர். அவர்கள் கணவன் மனைவி இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வழக்குப்பதிவு செய்து 6 நாட்களாகி உள்ள நிலையில், தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆண்டோ மதிவாணனும் அவரது மனைவியும் வழக்கறிஞர்கள் மூலம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்ஜான்மீன் பெற முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment